இந்தியாவின் மூத்த அரசுப் பணியாளர்களில் ஒருவரிடமிருந்து, இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஏற்பட்ட இக்கட்டான சூழல்களையும், உலகளாவிய நெருக்கடிக்கான எதிர்கால தீர்வை தீர்மானிக்கக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பன்முக சார்பியத்தையும் பற்றிய ஓர் அற்புதமான பகுப்பாய்வு பெறப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் துணைச் செயலாளராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு முன்னாள் ஆலோசகராகவும், இந்திய நிதி அமைச்சருக்குத் தனி செயலாளராகவும், சிறந்த பாராட்டுப்பெற்ற நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் உள்ள V. ஸ்ரீனிவாஸ் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிகழ்வுகள் பலவற்றின் விரிவான பகுப்பாய்வைத் தனது 17 மாத கால ஆராய்ச்சிகள் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் அளிக்கிறார்.
1991 முதல் 2016 வரை சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகளானது, சர்வதேச நாணய நிதியத்தின் துவக்க உறுப்பினராக இந்தியாவின் பங்கு, இந்தியாவினுடைய 1966, 1981, மற்றும் 1991 ஐஎம்எஃப் திட்டங்கள், 2010 ஆம் ஆண்டில் ஐஎம்எஃப்பில் இந்தியா செய்த தங்கக் கொள்முதல்கள், ஜி20 வளர்ச்சி மற்றும் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய முக்கிய பொருளாதார நாடாக இந்தியாவின் தோற்றம் ஆகியவை பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கிறது. இறுதிக்கட்ட நடவடிக்கை மூலம் கடன் அளிக்கும் அமைப்பாகவும், உறுப்பு நாடுகளைக் கையாளுவதில் ஈடற்ற ஆற்றல் கொண்ட நிறுவனமாகவும், சர்வதேச நாணய நிதியம் ஆற்றியுள்ள பங்கையும், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய அமைப்பில் சீனாவின் தோற்றம் ஆகியவற்றிற்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மேம்பட்ட பங்கையும் V. ஸ்ரீனிவாஸ் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
“சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகள் 1991-2016: 25 ஆண்டுக் காலத்திற்கான கண்ணோட்டம்” என்பது உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் தாக்கத்தை கொண்டுள்ள அமைப்புகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை அளிக்கக்கூடிய கருப்பொருளின் முதல் விரிவான ஆய்வாகும்
Shri V. Srinivas
ஸ்ரீனிவாஸ் அவர்கள் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது குறைகளுக்கான துறை, பணியாளர்கள், பொது மக்களின் குறைகள் மற்றும் ஓய்வூதியத்திற்கான அமைச்சகம் ஆகியவற்றில் இந்திய அரசாங்கத்திற்குத் கூடுதல் செயலாளராக இருக்கிறார். இவர் 2003 முதல் 2006 வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு ஆலோசகராக இருந்தார். 2002 முதல் 2003 வரை இந்திய நிதி அமைச்சருக்குத் தனிச் செயலாளராகவும், 2001 முதல் 2002 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தனி செயலாளராகவும் பணியாற்றினார். 2002 முதல் 2006 வரை வருடாந்திர நிதிய வங்கி கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய இந்தியத் தூதுக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 2010 முதல் 2012 வரை ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இவர், சர்வதேச பருத்தி ஆலோசக குழுவின் முழுமையான கூட்டங்களில் இந்தியத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார், மேலும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இவர், 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிய-ஐரோப்பியக் கலாச்சார கூட்டங்களில் இந்தியத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். 2014 முதல் 2017 வரை ஏய்ம்ஸின் (நிர்வாகம்) துணை இயக்குனராக பணியாற்றினார்.
V. ஸ்ரீனிவாஸ் அவர்கள் 2017 முதல் 2018 வரை ராஜஸ்தான் வருவாய் வாரியத்தின் தலைவராகவும், ராஜஸ்தான் வரி வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். 2017 ஆம் ஆண்டில் உலக நடவடிக்கைகளுக்கான இந்தியக் கழகம், “சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் தொடர்புகள் 1991-2016 - 25 ஆண்டுக் காலத்திற்கான கண்ணோட்டம்” என்ற புத்தகத்திற்காக, இவருக்கு புத்தக ஆராய்ச்சியாளர் என்ற விருதை வழங்கியது. மேலும் இவர் மூத்த நிர்வாகியாகவும், மதிப்புமிக்க கல்வியாளராகவும், சிறந்த சமநிலையுடைய நிறுவன கட்டமைப்பாராகவும் இருக்கிறார்.